1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Srilankan people stopped protest against government

அதிபருக்கு எதிரான போராட்டம்: திடீரென கைவிட்ட இலங்கை மக்கள்!

srilanka
இலங்கையில் அதிபருக்கு எதிராக கடந்த சில வாரங்களாக போராட்டம் நடந்து வந்த நிலையில் அந்த போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் உள்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டது. இதனையடுத்து மக்கள் போராட்டம் காரணமாக இலங்கை பிரதமராக இருந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்
 
அதேபோல் அதிபர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதன் பின்னர் தற்போது ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார் 
 
இலங்கை மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?