திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:22 IST)

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அரசு பேருந்துகளில் இலவசம்? உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

yogi
தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து இருப்பது போல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலவசப் பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என இன்று நடைபெற்ற அரசு விழாவில் அவர் தெரிவித்தார்
 
ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் முதல்வரின் இந்த அறிவிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
உத்தர பிரதேச மாநிலத்தை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது