வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (16:47 IST)

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 1300 பேர் பலி என தகவல்!

earthquake turkey1
துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 1300 பேர் பலி என தகவல்!
துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக 1300 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில் சற்று முன் இரண்டாவதாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
துருக்கியில் இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவிற்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் 2800 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 1300 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. மேலும் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் 7.5 ரிக்டர் என்ற அளவில் இருப்பதாகவும் இதனால் கட்டிடங்கள் குலுங்கி பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து மீட்பு படை மற்றும் மருத்துவ உபகரணங்களை உடனடியாக அனுப்ப பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran