1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madurai youth dead for online rummy

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிர் பலி: மதுரை இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!

rummy
ஆன்லைன் ரம்மியால் ஏற்கனவே தமிழகத்தில் பல உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் தற்போது மதுரையில் இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மிக்கு பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
மதுரை அண்ணா நகர் பகுதியில் வரும் தனியார் ஹோட்டலில் சேலத்தை சேர்ந்த குணசீலன் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். அவர் சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் பணத்தை இழந்ததாக தெரிகிறது. 
 
கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக ஆன்லைன் ரம்மி விளையாடிய லட்ச கணக்கில் பணத்தை இழந்ததாகவும் இதனை அடுத்து கடனாளி ஆகிவிட்ட அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆன்லைன் நன்மையை தடை செய்ய வேண்டும் என மசோதா இயற்றப்பட்ட நிலையிலும் இன்னும் அந்த மசோதா அமலுக்கு வரவில்லை என்பதால் தொடர்ந்து உயிர்கள் பலியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இபிஎஸ் வேட்பாளருக்கு அமோக ஆதரவு! அதிமுக வேட்பாளராக தென்னரசு?