வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 பிப்ரவரி 2023 (15:04 IST)

சீனா: நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து- 16 பேர் பலி

china
சீனாவில் சாங்ஷா நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த்தியுள்ளது. வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
 
சீனாவில் தெற்கு பகுதிலுள்ளஹூனான் மாகாணத்தின் தலைநகர் சாங்க்காவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் நேற்று முன் தினம் மாலை,  பல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது,எதிர்பாராத வகையில்,  வாகனங்கள்  ஒன்றோடு ஒன்று மோதி விபத்தில் சிக்கின.

இதில், 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள்  விபத்தில்  சிக்கியதால் தீ விபத்து ஏற்பட்டதுடன், புகை மண்டலம் ஆகக் காட்சியளித்தது.

இந்தக் கொடூர விபத்தில் 16 பேர் பலியானதாகவும், 60 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.