1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Russia Ukraine war stop conference tomorrow

போரை நிறுத்துமா ரஷ்யா? மீண்டும் நாளை உக்ரைன் பேச்சுவார்த்தை!

World
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் போரை நிறுத்தக்கோரி நாளை உக்ரைன் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. உக்ரைனில் உள்ள பிற நாட்டவர்கள் அங்கிருந்து எல்லை வழியாக தப்பி செல்லும் நிலையில், உக்ரைன் மக்களே பலர் அகதிகளாகி உள்ளனர்.

இந்நிலையில் போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை. இந்நிலையில் நாளை உக்ரைன் – ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையை முன்னிட்டு ரஷ்யா உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நிதி ஒதுக்கீடு! – தமிழக அரசு!