செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 6 மார்ச் 2022 (10:33 IST)

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நிதி ஒதுக்கீடு! – தமிழக அரசு!

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் அங்குள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ் மாணவர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிநாடு வாழ் தமிழர் நிதியை பயன்படுத்தி மாணவர்களை மீட்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் மற்றும் சிறப்பு குழுக்களுக்கான செலவுக்காக ரூ.1.50 கோடியும், டெல்லி வந்தடையும் மாணவர்கள் விமானம் மூலமாக தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடியும் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.