1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Russia test nuclear weapons in border

அணு ஆயுத போர் பயிற்சியில் ரஷ்யா; பீதியில் உக்ரைன்!

Russia
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் சமீப காலமாக அணு ஆயுத பயிற்சியிலும் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் அகதிகளாக வெளியேறும் சோகமும் நிகழ்ந்துள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. இதனால் உக்ரைனும் அவ்வபோது ரஷ்ய ராணுவம் மீது பதில் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் பல ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரஷ்ய ராணுவம் அணு ஆயுத போர் பயிற்சிகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. போலந்து மற்றும் லித்துவேனியா இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட பால்டிக் கடல் பகுதியில் அணு ஆயுதங்களை தாங்கி கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஸ்கேண்டர் ஏவுகணைகளை அனுப்பி பயிற்சி மேற்கொண்டுள்ளன.

இதேபோன்று கதிரியக்கம் மற்றும் ரசாயன வீச்சு ஆகிய தாக்குதல் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளதால் உக்ரைன் மீது அபாயகரமான ஆயுதங்களால் தாக்க ரஷ்யா திட்டமிடுகிறதா என்ற பதட்டம் எழுந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பிரம்மாண்ட விலையில் பிரம்மிப்பூட்டும் அம்சங்களுடன் Vivo T1 44W !!