திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மே 2022 (12:21 IST)

இலங்கைக்கு திமுக எம்.பி.க்களின் 1 மாத ஊதியம் நன்கொடை!

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக திமுக எம்.பி-க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு. 

 
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பலர் படகுகள் மூலமாக தமிழகத்தை நோக்கி வருவதும் அதிகரித்துள்ளது.
 
இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், மக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இலங்கை தமிழர்களுக்கு உதவ நிதியளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு திமுக எம்.பி-க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என திமுக தலைமைக்கழகம் அறித்துள்ளது. 
 
முன்னதாக இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக திமுக சார்பில் ரூ.1 கோடியும் எம்.எல்.ஏ-க்களின் ஒருமாத ஊதியமும் முதல்வரின் பொது  நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.