தொடர்புடைய செய்திகள்
அஷ்ரப் கனியை சாடிய ரஷ்ய தூதரக அதிகாரிகள்
அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி சென்றது வெக்கக்கேடு என ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட அனைத்து நகரங்களையும் தலிபான் படைகள் கைப்பற்றிய நிலையில் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தான் அதிபர் அப்துல் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவர் தன்னுடன் கோடிக்கணக்கான பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அப்துல் கானி, கஜகஸ்தான் என்ற நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஓமன் நாட்டில் இருப்பதாக ரஷ்ய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதோடு ஆப்கான் மக்களுக்காக உயிரையும் துறப்பேன் என்று கூறி வந்த அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி சென்றது வெக்கக்கேடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
