1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (13:36 IST)

அரசு விழாவா இது... அதிமுகவை சாடிய கருணாஸ்!

அரசு விழாவை புறக்கணித்து அதிமுக மீது கருணாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ், கடந்த சட்டமன்ற தேர்தலில் திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த சில நாட்களாக சசிகலாவிற்கு ஆதரவாக வெளிப்படையாக பேசிவந்தார். 
 
இந்நிலையில் அரசு விழாவை புறக்கணித்ததோடு, அதிமுக விழாபோல் நடந்ததாக கருணாஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம், மினி கிளினிக் திறப்பு விழா அரசு விழா போன்று இல்லாமல், அதிமுக கட்சி விழா போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால்தான் அப்பகுதியில் விழாவிற்கு செல்லவில்லை என தெரிவித்தார் கருணாஸ்.