ஒரு மேஜை கூட இல்லை… டெல்லி விமான நிலைய நிர்வாகத்தை சாடிய ராஜமௌலி!

Last Modified வெள்ளி, 2 ஜூலை 2021 (17:18 IST)

டெல்லி விமான நிலையத்தில் கொரோனா சோதனைக்கான படிவங்களை நிரப்ப பயணிகளுக்கு ஒரு மேஜை கூட இல்லை என்று ராஜமௌலி கூறியுள்ளார்.

இந்தியாவின் மிக முக்கியமான வணிக திரைப்பட இயக்குனர்களில் எஸ் எஸ் ராஜமௌலியும் ஒருவர். அவர் சமீபத்தில் டெல்லி விமான நிலையத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் ’ நான் லூஃப்தானா விமானத்தின் மூலம் விமான நிலையத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்தடைந்தேன். அப்போது
அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா பிசிஆர் சோதனை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அதைப் பூர்த்தி செய்ய மேஜைகள் எதுவும் அமைக்கப்பட்டு இருக்கவில்லை. படிவங்களை தரையில் அமர்ந்தும் சுவற்றில் வைத்து எழுதியும் பூர்த்தி செய்துகொண்டிருந்தார்கள். இப்படி செய்வது நன்றாக இல்லை. இது ஒரு எளிய சேவை.

அதேபோல , விமான நிலையத்தின் வெளிப்புறம் தெரு நாய்கள் அதிகளவில் இருந்தன. இது வெளிநாட்டினருக்கு இந்தியா குறித்து நல்லப் பார்வையைத் தராது. தயவு செய்து இதனைக் கவனிக்கவும்’ எனக் கூறியுள்ளார்.

இதில் மேலும் படிக்கவும் :