1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Ready for talks with Ukraine! - Russian announcement

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் ! - ரஷ்யா அறிவிப்பு,

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்
உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என  ரஷ்ய நாடு அறிவித்துள்ளது.

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், கார்கின்  நகரை ரஷ்யா முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாகவும் 471 உக்ரைன் ராணுவ   வீரர்களைப் பிடித்துவைத்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது  மேற்கத்திய நாடுகள் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான நிதி முடக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத்தெரிகிறது.

பெலாராஸ் நாட்டில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடந்துவதற்கு ரஸ்யா  முன் வந்துள்ளது. தற்போது போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!