செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (12:39 IST)

உக்ரைன் போர்: இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யா படிப்படியாக ஒவ்வொரு நகரமாக கைப்பற்றி வருகிறது என்பதும் இந்த போரின் காரணமாக உக்ரேன் சிக்கலுக்கு உள்ளாக்கியது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் உக்ரைனில் உள்ள தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களைக்  ரஷ்யா கைப்பற்றிய அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
மேலும் தலைநகர் கீவ் நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி கொண்டிருப்பதால் உக்ரைன் ராணுவ வீரர்கள் பெரும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த  நிலையில் இந்த போர் வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றும் உக்ரைன் முழுவதுமே விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது