1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:35 IST)

ரஷ்யா- உக்ரைன் போர்: எலான் மஸ்கின் உதவியை நாடிய உக்ரைன் அதிபர் !

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இன்று  4 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்ம் ரஷ்ய நாடு  உக்ரைன் இணையதளங்களை முடக்கியுள்ளதால் உக்ரைன் மக்களும், ராணுவத்தினரும் தவித்து வருவதாக உக்ரைன் அதிபர்  வேதனை தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ஸ்பேஸ்  நிறுவனர் எலான் மஸ்கின் உதவியை நாடினார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் வெற்றிகரமான வானில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது;  ரஷ்யாவின் ராக்கெட் உக்ரைன் மக்களை தாக்கி வருகிறாது. அதனால் ஸ்டார்லிங்க் மூலம் எங்களுக்கு  இணையசேவை வழ  வழங்கி உதவ வேண்டுமென  கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, எலான் மஸ் ஸ்டார்லிங் சேவை தற்போது இப்போது உக்ரைனில் செயல்படத் தொடங்கியதாகத் உக்ரைன் அதிபருக்கு தெரிவித்துள்ளார்.