தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு!
- கவர்னர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்!? – வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு!
- டிசம்பர் 20,21 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- கான்க்ரீட், தார் சாலைகளுக்கு மாற்று சாலை: சென்னை மாநகராட்சி திட்டம்
- 2 நாள் சரிவுக்கு பின் மீண்டும் தங்கம் விலை உயர்வு: கிராம் ரூ.5050ஐ தாண்டியது!
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தூத்துக்குடி ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Edited by Siva
