தொடர்புடைய செய்திகள்
- இன்று வேட்பாளர் இறுதி பட்டியல், சின்னம் அறிவிப்புகள்! – காத்திருப்பில் வேட்பாளர்கள்!
- நமக்கு தலைவர்கள் வேண்டாம்; சமூக சேவகர்கள் வேண்டும்! – கமல்ஹாசன் பரப்புரை!
- தேவையில்லாத விவகாரங்களை பேசாதீங்க..! – அரக்கர்கள் கூட்டத்திற்கு முதல்வர் வார்னிங்!
- பாண்டிபஜார் தீ விபத்தில் சிக்கிய நடிகர்! – என்ன நடந்தது?
- ரொம்ப நாள் ஆசை சார்.. போலீஸ் வாகனத்தை திருடிய ஆசாமி!
போலீஸை அரிவாளால் வெட்டிய கும்பல்! – பழனியில் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போலீஸை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்தான கிருஷ்ணன். நேற்று இரவு சந்தான கிருஷ்ணன் தனது நண்பர் ஆனந்தன் என்பவருடன் பேசியபடி சாலையில் நின்றுள்ளார்.
அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்த மர்ம கும்பல் ஆனந்தனையும், சந்தான கிருஷ்ணனையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தாக்கிய ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
