வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (14:08 IST)

பாண்டிபஜார் தீ விபத்தில் சிக்கிய நடிகர்! – என்ன நடந்தது?

சென்னை பாண்டி பஜார் தீ விபத்தில் நடிகர் ஒருவர் குடும்பத்துடன் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் தி நகர் பாண்டி பஜார் பகுதியில் ஏராளமான கடைகளும், வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்க வரும் பகுதி என்பதால் எப்போது கூட்ட நெரிசலாக இந்த பகுதி இருக்கும்.

இந்நிலையில் இன்று பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. 3 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் தீப்பற்றிய நிலையில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் தமிழ் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ அவரது குடும்பத்தினருடன் சிக்கிக் கொண்டுள்ளார். சுமார் 70 பேர் மூன்றாவது மாடியில் சிக்கியிருந்த நிலையில் தீயணைப்பு துறையினர் திறம்பட செயல்பட்டு தங்களை காப்பாற்றியதாக ஸ்ரீ தெரிவித்துள்ளார்.