செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (15:33 IST)

தேவையில்லாத விவகாரங்களை பேசாதீங்க..! – அரக்கர்கள் கூட்டத்திற்கு முதல்வர் வார்னிங்!

சமூக வலைதளங்களில் திமுகவிற்கு ஆதரவாக பிற கட்சிகளை விமர்சிக்கும் நபர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகள் தனித்தனியாக தேர்தலில் களம் இறங்கியுள்ளன.

இந்நிலையில் கடந்த சில காலமாகவே திமுக ஆதரவாளர்கள் சிலர் அரக்கர் கூட்டம் என்ற பெயரில் திமுகவை விமர்சிப்பவர்களுக்கு பதில் தருவதாக பிற கட்சிகளை அவதூறு பேசுவதும், ஈழ விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடுவதும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் இதை சுட்டிக்காட்டி பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து செயல்பாடுகளையும் தான் கவனித்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் இருப்போர் பிற கட்சிகள் குறித்து வன்மமாக பதிவிடாமல், திமுகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.