வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:54 IST)

ரொம்ப நாள் ஆசை சார்.. போலீஸ் வாகனத்தை திருடிய ஆசாமி!

கர்நாடகாவில் ஆசைக்காக போலீஸ் வாகனத்தை திருடிய ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மனிதர்களுக்கு பல்வேறு ஆசைகள் உள்ள நிலையில் சில சமயங்களில் அந்த ஆசையை நிறைவேற்ற அவர்கள் செய்யும் செயல்கள் பெரும் வைரலாகி விடுகின்றன. அப்படியான ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் அன்னிக்கேரி பகுதியை சேர்ந்த 45 வயது நபர் ஒருவருக்கு நீண்ட காலமாக போலீஸ் வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்கான சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்த அந்த நபர் அன்னிக்கேரி பகுதியில் நின்றிருந்த காவல் வாகனம் ஒன்றை எடுத்து ஓட்டி சென்றுள்ளார். வாகனம் திருடப்பட்டதை போலீஸார் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட வாகனத்தை சேஸ் செய்து 112 கி.மீ தொலைவிற்கு அப்பால் போலீஸார் பிடித்துள்ளனர். வாகனத்தை திருடிய நபரிடம் விசாரித்ததில் தனக்கு போலீஸ் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்ததாக தெரிவித்துள்ளார்.