ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (19:43 IST)

உயிர்பயத்தில் விமானம் தரையிறங்கும் முன்பே குதித்து வெளியேறிய பயணிகள்

அமெரிக்காவில் அவசர அவசரமாக தரையிறக்க முடிவு செய்த விமனாத்தில் இருந்து பயணிகள் விமானம் தரையிறங்கும் முன்பே குதித்து வெளியேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
அமெரிக்காவில் விமானம் ஒன்று டல்லாசில் இருந்து போனிஸ் பகுதிக்கு 140 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானியின் இருக்கை பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் பயந்துபோன விமானிகள் உடனடியாக பயணிகளை எச்சரித்துள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து விமானத்தை அவசர அவசரமாக அல்புகுயர்கியூ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் பயணிகள் விமானம் தரையிறங்கும் காத்திருக்கவில்லை. உயிர்பயத்தில் அவசர கால வழியாக சிலர் விமானம் 8 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதே வெளியே குதித்தனர்.