திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 10 மார்ச் 2018 (13:30 IST)

நான் செய்ய வேண்டியதை செய்துவிடுவேன்: இந்தியா, சீனாவிற்கு டிரம்ப் மிரட்டல்...

அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் ஹார்லி டேவிட்சன் 800 சிசி வரை கொண்ட பைக்குகளுக்கு 60%, 800 சிசிக்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு 75% வரியும் விதிக்கப்பட்டு வந்தது.  
 
சமீபத்தில் இதன் மீதான வரி 50% ஆக குறைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு குறைந்த வரி அல்லது வரியே இல்லாத நிலையில், அமெரிக்க பைக்கிற்கு மட்டும் வரி விதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.  
 
இதற்கு முன்னர் டிரம்ப், மோடியை இது குறித்து விமர்சனம் செய்திருந்தார். தற்போது இதேதான் சீனாவிலும் நடப்பதாக தெரிகிறது. ஆம், அமெரிக்க கார்களுக்கு சீனாவில் 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் சீன கார்களுக்கு 2.5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்படுகிறதாம். 
 
இது குறித்து டிரம்ப் பேசியதாவது, அமெரிக்காவில் இந்திய மற்றும் சீன பொருட்களுக்கு குறைந்த வரி விதிக்கப்படுகிறது. இதனால், சீனா மற்றும் இந்திய பொருட்கள் அமெரிக்காவில் பெருமளவு குவிந்து வருகின்றன. அவர்கள் அமெரிக்க சந்தையை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
 
ஆனால், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படுவது நியாயமான வர்த்தகம் அல்ல. இந்த நிலை நீடித்தால் இனி அங்கு விதிக்கப்படும் அதிக வரி போல இங்கும் அதிக வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.