வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 மார்ச் 2018 (15:47 IST)

நேபாளத்தில் விமான விபத்து: 65 பயணிகளின் நிலை என்ன?

நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நொருங்கி விழுந்ததது. அந்த விமானத்தில் பயணித்த 65 பயணிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை.
 
வங்கதேசத்தை சேர்ந்த பயணிகள் விமானம் 78 பயணிகளுடன் அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்துக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.
 
நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 65 பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது வரை 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். 
 
விமானம் முழுவதும் தீப்பற்றி எரிவதால் எஞ்சிய 65 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.