1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Pakistani escaped showing Indian Flag

இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி தப்பித்த பாகிஸ்தானியர்கள்!

இந்திய தேசிய கொடி
இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி உக்ரைனிலிருந்து பாகிஸ்தான், துருக்கி நாட்டினரும் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனில் பல நாட்டு மக்களும் சிக்கியுள்ள நிலையில் பலர் அண்டை நாடுகளான லிதுவேனியா, லாட்வியா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு படிக்க சென்ற மாணவர்கள் பலர் அங்கு சிக்கியுள்ளனர். மாணவர்கள் பலர் அண்டை நாடுகளுக்கு தப்பி சென்று அங்கிருந்து இந்திய அரசின் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இயக்கப்படும் விமானங்கள் வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தி உக்ரைனிலிருந்து பாகிஸ்தான், துருக்கி நாட்டினரும் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனிலிருந்து எல்லை வழியாக அண்டை நாடுகளுக்கு செல்ல தேசிய கொடியை இந்தியர்கள் பயன்படுத்தினர். இந்தியர்களுடன் பாகிஸ்தான், துருக்கியை சேர்ந்தவர்களும் தேசிய கொடியை பயன்படுத்தி தப்பியுள்ளார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஒட்டுமொத்தமாய் 1,054 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!