ஐரோப்பிய யூனியனில் இணையும் உக்ரைன்! – விண்ணப்பம் ஏற்பு!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய யூனியனில் இணைய உக்ரைன் விடுத்த விண்ணப்பம் ஐரோப்பிய பாராளுமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ரஷ்யாவின் இந்த செயலை கண்டிக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
இந்நிலையில் 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விண்ணப்பித்த நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றம் இந்த விண்ணப்பத்தை ஏற்றுள்ளது. அதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் இருந்து உக்ரைனுக்கு ஆயுத உதவி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.