1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. OpenAI CEO Sam Altman's House Targeted in Incendiary Device Attack; Suspect Arrested

OpenAI நிறுவனத்தால் வேலை போச்சு.. சாம் ஆல்ட்மேன் வீட்டில் வெடிகுண்டு வீசிய இளைஞர்..!

சாம் ஆல்ட்மேன்
செயற்கை நுண்ணறிவு துறையின் முன்னணி நிறுவனமான OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனின் சான் பிரான்சிஸ்கோ இல்லத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 நேற்று அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து OpenAI தலைமையகத்தின் வெளியேயும் தீ வைக்க போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
 
இந்த தாக்குதல் தொடர்பாக 20 வயது இளைஞர் ஒருவரை சான் பிரான்சிஸ்கோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏஐ தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை பறிக்கும் மற்றும் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாகவே இத்தகைய போராட்டங்களும் தாக்குதல்களும் நடத்தப்படுவதாக கருதப்படுகிறது. 
 
குறிப்பாக, அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் OpenAI இணைந்து பணியாற்றுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தனது வலைப்பதிவில் பதிவிட்டுள்ள ஆல்ட்மேன், தொழில்நுட்ப வளர்ச்சி எதிர்காலத்தை நன்மையாக்கவே உதவும் என்றும், இத்தகைய வன்முறைகளை குறைத்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சென்னை போலீஸ் கமிஷனர் திடீர் மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!