தொடர்புடைய செய்திகள்
- சீனாவில் நுகர்வோர் சந்தை வீழ்ச்சி....ஆனால் ஆணுறை விற்பனை அதிகரிப்பு
- பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 17 வயது சிறுவர்கள் சாலை விபத்தில் மரணம்.. நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்..!
- இந்தியாவின் மக்கள் தொகை எவ்வளவு? சீனாவை விட அதிகமா? உள்துறை அமைச்சகம் பதில்
- 44 வது மாடியில் 3.2 கோடி சொகுசு காரை பார்க்கிங் செய்த கோடீஸ்வரர்
- ப்ராவுக்குள் மறைந்திருந்த பாம்பு! எட்டிப்பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி! – நூதன சம்பவம்!
18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்தலாம்: புதிய கட்டுப்பாடு
18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதி என்று சீன அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.
சீனாவின் சைபர்செல் அமைச்சகம் இது குறித்து தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஸ்மார்ட் ஃபோன்களில் இணைய சேவைகளை பெற முடியாது என்றும் அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல் 8 முதல் 15 வயது உட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உகந்தவையாக கருதப்படும் செயலிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
