திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (09:24 IST)

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 17 வயது சிறுவர்கள் சாலை விபத்தில் மரணம்.. நள்ளிரவில் அதிர்ச்சி சம்பவம்..!

பொள்ளாச்சியில் நள்ளிரவில் இளம்பெண் ஒருவரிடம் நகை பறிக்க முயன்ற போது பைக்கில் வந்த இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
பொள்ளாச்சி நகரில் நேற்று முன்தினம் கடைவீதியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை பறித்துவிட்டு மாயமாகினர்.
 
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற அந்த மர்ம நபர்கள்  அருகில் உள்ள மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது மைய தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகினர்
 
இந்த விபத்து குறித்து  தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சம்பவம் இடத்திலேயே இருவரும் இறந்து கிடந்ததை பார்த்தனர். அதன் பின்னர் தான் சிசிடிவி காட்சியின் சோதனை போது பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் இறந்தவர்கள் என்பது தெரிய வந்தது. 
 
இதனை முடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில்  உயிரிழந்த இருவரும் 17 வயது சிறுவர்கள் என்று தெரியவந்துள்ளது.
 
Edited by Siva