செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (15:42 IST)

சீனாவில் நுகர்வோர் சந்தை வீழ்ச்சி....ஆனால் ஆணுறை விற்பனை அதிகரிப்பு

சீனாவில் நுகர்வோர் சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் ஆணுறை விற்பனை அதிகரித்துள்ளது.
 

சீனாவில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த 2019 ஆம் ஆண்டு அங்கு கொரோனா தொற்று உருவாகி, ஊரடங்கு உத்தரவு போன்றவற்றால், அந்த நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து மெள்ள மெள்ள மீண்டு வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் முன்னணி நிறுவனமான இந்துஸ்தான் யூனி லிவர் நிறுவனம் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, சீனாவின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதால், நுகர்வோர் வர்த்தக அளவீடு வரலாறு காணாத வகையில் மிகவும் குறைவாக இருப்பதாய்க கூறியுள்ளது. இருப்பினும்,  சீனாவின் உள்ள பொருளாதார மனந்த நிலையை மாற்றி,  நுகர்வோரை மீட்டு, அவர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கலாம்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சீனாவில் நுகர்வோர் தரப்பில் வீழ்ச்சி அடைந்தாலு,  அங்கு ஆணுறைகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.