1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cool suresh comment against who troll vijaya prabakaran

விஜய பிரபாகரன் ட்ரோல்!.. நீங்கலாம் என்னா ஜென்மம்?!.. வெளுத்து வாங்கிய கூல் சுரேஷ்...

vijaya prabakaran
விஜயகாந்தின் மைத்துனர் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் சுதீஷின் மகள் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் மற்றும் விக்ரம் உள்ளிட்ட சில திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகரன் அணிந்திருந்த உடை, அவரின் ஹேர் ஸ்டைல் மற்றும் உடல் மொழி என அனைத்தையும் சிலர் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து நடிகர் கூல் சுரேஷ் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘சுதீஷ் சாரின் மகள் திருமணத்தில் விஜயகாந்த் சாரோட மகன் விஜய பிரபாகரனை வேற மாதிரி சித்தரிச்சி சிலர் கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க.. அதேபோல், அண்ணியார் பிரேமலதா அம்மாவின் மேக்கப் பத்தியும் கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க.. நீங்கலாம் என்ன மாதிரியான ஜென்மமா இருக்கீங்க? உங்களுக்கு மூளை குழம்பிடிச்சுன்னா டாக்டர போய் பார்த்து ஊசி போட்டு மருந்து மாத்திரை சாப்பிட்டு அந்த நோயை குணப்படுத்த பாருங்க’ என அந்த வீடியோவில் அவர் பேசி இருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பெண்களுக்கு 365 நாள்.. ஆண்களுக்கு 15 நாள்.. மகப்பேறு விடுப்பு அறிவித்த முதல்வர் விஜய்...