திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (10:25 IST)

கொரோனா கட்டுக்குள் வராதது ஏன்? கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு!

கேரளாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் வராதது ஏன் என பற்றி கண்டறிய மத்திய சுகாதாரத்துறை 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்த நிலையில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கோரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. 
 
இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் நாட்டின் தினசரி பாதிப்பில் 50% பதிவாகி இருப்பதால், அம்மாநிலத்தில் கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2 நாட்களாக அங்கு பாதிப்பு எண்ணிக்கை தினமும் 10,000க்கும் மேல் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனிடையே கேரளாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் வராதது ஏன்? என்பது பற்றி கண்டறிய மத்திய சுகாதாரத்துறை 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. ஆம், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் எஸ்.கே.சிங் தலைமையிலான குழு கேரளாவில் ஆய்வு செய்து நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்குகிறது.