புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (10:40 IST)

இன்று வெளியாகிறது சிபிஎஸ்சி +2 ரிசல்ட்! – எதிர்பார்ப்பில் மாணவர்கள்!

கொரோனா காரணமாக சிபிஎஸ்சி தேர்வுகள் நடைபெறாத நிலையில் இன்று ரிசல்ட் வெளியாக உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்த நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் முந்தைய 10 மற்றும் 11 வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அளிக்க சிபிஎஸ்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

சமீபத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த +2 மாணவர்களுக்கு ரிசல்ட் வெளியான நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு சிபிஎஸ்சி +2 மாணவர்களுக்கான ரிசல்ட் வெளியாக உள்ளதாக சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.