திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (10:00 IST)

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: பிறந்த குழந்தை பலி!

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் பிறந்த குழந்தை உட்பட 8 பேர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி தாக்குதல் நடத்தி வருகின்றது. தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் வான்வழி படைகள் நடத்தும் தாக்குதலில் அப்பாவி மக்களும் பலர் இறந்து போகிறார்கள்.

இந்நிலையில் கோஸ்ட் மாகாணத்தில் அமெரிக்க கூட்டணி படைகள் நடத்திய தாக்குதலில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை, அதன் தாய் மற்றொரு சிறுமி உள்ளிட்ட 8 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.