உச்சமடைந்த பருவநிலை மாற்றம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
உலகம் முழுவதும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் பருவநிலை மாற்றம் உச்சத்தை அடைந்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சமீப வருடங்களில் உலகமெங்கிலும் பருவநிலை மாறுபாடு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த க்ரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட பலர் ஐ.நா சபை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புவி வெப்பமயமாதல் அளவு ஆபத்தான அளவையும் தாண்டி சென்று விட்டதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். டோமினோ விளைவு எனப்படும் தொடர் சங்கிலி நிகழ்வுகளால் அதிகரித்துள்ள புவி வெப்பமயமாதல் டிப்பிங் பாயிண்ட் அளவில் 9 புள்ளிகளை தாண்டி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் காலங்களில் உலகம் மிகப்பெரும் சுற்றுசூழல் அச்சுறுத்தலை சந்திக்க வேண்டியிருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.