திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 28 அக்டோபர் 2017 (12:49 IST)

சீனாவால் இந்தியாவுக்கு ஆபத்து; நாசா எச்சரிக்கை

சீனாவின் தென் பகுதியில் வீசிக்கொண்டிருக்கும் புயல் காரணமாக இந்த வருடம் இந்தியாவில் அதிக அளவிலான மழை பெய்து வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது.


 

 
சீனாவில் கடந்த சில மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து புயல் வீசி வருகிறது. ஸ்வாலா என்று பெயரிடப்பட்டுள்ள புயல் சீனாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையாமல் இருப்பதற்கு சீனாவில் நிலவி வரும் புயல் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இதுகுறித்து நாசா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 
 
சீனாவின் தென் பகுதியில் வீசி வரும் ஸ்வாலா புயல் காரணமாக இந்த வருடம் இந்தியாவில் அதிக அளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பருவமழை தாமதமாக ஆரம்பித்தாலும் மழை அளவு அதிகமாக இருக்கும். ஸ்வாலா புயல் தற்போது ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நகர்வதால், இந்தியாவில் மழை அதிகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.