திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (18:55 IST)

‘நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகத்தால் இருவர் கைது

கான்பூர் கடை ஒன்றில் ‘பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் விற்பனை செய்யப்பட்டதால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 

 
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கடை ஒன்றில் ‘நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் விற்பனை செய்யப்பட்டது. திடீர் சோதனையில் ஈடுப்பட்ட காவல்துறையினர் பலூன்களை பறிமுதல் செய்ததோடு இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
விசாரணையில் பலூன்கள் டெல்லியில் உள்ள சர்தார் பஜாரில் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து உத்தரபிரதேச காவல்துறையினர் டெல்லி சென்று விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் என்றாலே எதிரி நாடு, தீவிரவாதம் உள்ள நாடு என இந்திய மக்களிடம் பதிவு செய்துவிட்டனர். இந்நிலையில் ‘நான் பாகிஸ்தானை விரும்புகிறேன்’ என்ற வாசகம் பலூனில் இடம்பெற்றத்துக்கு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.