புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2017 (14:13 IST)

புதிய விதிமுறையை அமல்படுத்தி இந்தியாவையே அதிரவிட்ட கர்நாடக அரசு

இருசக்கர வாகனங்களுக்கு யாரும் சிக்கலான புதிய கட்டுபாடுகளை விதித்து கர்நாடக அரசு இந்தியாவையே அதிரவைத்துள்ளது.


 

 
குறிப்பிட்ட சிசி கொண்ட இருசக்கர வாகனங்களில் டபுள்ஸ் செல்ல கட்நாடக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கர்நாடக மாநில வாகன ஓட்டிகள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். கர்நாடக அரசின் இந்த முடிவு இந்தியாவையே அதிரவைத்துள்ளது.
 
குறிப்பாக கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பைக் விபத்துகள் அதிக அளவில் உள்ளது. இதனால் உயிரிழப்பு பெரும் அளவில் ஏற்படுகிறது. வாகன விபத்து அதிகம் ஏற்படும் நகரங்களில் பெங்களூர் முதலிடத்தில் உள்ளது. விபத்தில் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பின் அமர்ந்து சென்றவர்கள்தான்.
 
இதை கருத்தில் கொண்டு கர்நாடக மாநில அரசு தீவிர ஆலோசனைக்கு பிறகு இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த 23ஆம் தேதி இந்த சட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் எந்தெந்த வாகனங்களுக்கு இந்த சட்டம் பொருந்து என்பதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
 
மொத்தம் 9 பைக் வகைகளுக்கு இந்த சட்டம் பொருந்தும். TVS நிறுவனத்தின் Scooty Pep Plus, Sport மற்றும் XL 100. Hero நிறுவனத்தின் Splendor plus, Splendor Pro, HF Deluxe, HF Deluxe Eco, Passion Pro i3s. Bajaj நிறுவனத்தின் CT 100. ஆகிய பைக் வகைகளில் டபுள்ஸ் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.