1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 28 அக்டோபர் 2017 (12:47 IST)

52 வினாடிகள் நிற்க முடியாதா?? டிவிட்டரில் காம்பீர் காட்டம்!!

தேசிய கீதம் இசைக்கப்படும் போது ஒரு 52 வினாடிகள் நிற்க முடியாதா?? என இந்திய கிரிக்கெட் வீரர் காம்பீர் டிவிட்டரில் காட்டமாய் பதிவிட்டுள்ளார்.


 
 
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர், இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை பெற முக்கிய காரணமாக இருந்தவர்.
 
ஆனால், இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். காம்பீர் சமூக அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறார். 
 
இந்நிலையில் திரையரங்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பது குறித்த விவாதத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
 
இதுகுறித்து காம்பிர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பின்வருமாறு,  பிடித்த ரெஸ்டாரண்ட் வெளியே 30 நிமிடங்கள் காத்திருக்க முடியும், கிளப்புகளுக்கு வெளியே 20 நிமிடங்கள் வரிசையில் நிற்க முடியும். ஆனால், தேசிய கீதத்திற்காக 52 வினாடிகள் நிற்பது கடினமா என்ன? என கேட்டுள்ளார்.