திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (18:13 IST)

மாயமான விமானம் : உடைந்த பாகங்கள் கடலில் கிடப்பதாக தகவல்!

இந்தோனேஷியாவில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு மயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இந்தோனேஷியாவில் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட 737- 500 என்ற விமானம் ஃபோண்டியானாப் பகுதி அருகே 11000 அடி உயரத்திற்கு மேலே பறந்து சென்ற போது, 182 பயணிகளுடன் திடிரென மாயமானதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
அந்த விமானத்தில் பயணித்த 55 பயணிகளின் நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் விமானத்தின் பாகங்கள் கடலில் கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அது காணாமல் போன விமானத்தின் பாகங்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது.