1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 26 டிசம்பர் 2020 (16:27 IST)

பைக் ரேசில் ( Byke Race) ஈடுபட்டால் சிறை - போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு !!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கடற்கரை, சாலைகள், ஹோட்டல்கள், ரிசாட்களில் கொண்டாட அனுமதியில்லை என்று ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புத்தாண்டை கொண்டாடுவதற்காக இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டாலோ அல்லது அதிவேகமாகவோ அல்லது போதையில் வாகனத்தில் பயணித்தாலோ கைது செய்யப்படுவர் என சென்னைப் போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, அதிவேகத்திலோ அல்லது போதையில் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த ஆண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.