திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 டிசம்பர் 2020 (17:46 IST)

விஜய்யின் ’’மாஸ்டர்’’ பட டீஸர் புதிய சாதனை !! ரசிகர்கள் கொண்டாட்டம் !

சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் பட டீஸர் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதித்துள்ளது. இதனால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துவிட்டது என்ற தகவல் ஏற்கனவே கசிந்து விட்டது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடாமல் மவுனம் காத்து வந்ததால் விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் சற்று முன் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெகதீஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்திலும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்திலும் ‘மாஸ்டர்’ படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ள்து.

அத்துடன் மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டரில் வெளியிடப்படும் என படக்குழு கூறியுள்ளது.

மேலும், இப்படத்தின் தெலுங்கு வெர்சனில் அனிருத் இசையில் இடம்பெற்றுள்ள சிட்டி ஸ்டோரி என்ற பாடல் 25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகி வைரலானது.

இதேபாடல் தமிழில் குட்டி ஸ்டோரி என்ற பெயரில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாஸ்டர் பட டீஸர் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள்  ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

டீசர் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.