’’தமிழக வீரப் பெண்மணி’’ வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ள நயன்தாரா??
தமிழகத்தில் வீரப் பெண்மணிகளில் ஒருவர் வீரமங்கை வேலு நாச்சியார். இவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை நயன் தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
தமிழகத்தில் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்தவர் வேலுநாச்சியார் இவர் கல்வி, போர் முதலிய அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கியவர்.
இந்நிலையில், சினிமாவில் வரலாற்றுப் படங்கள் எடுக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை கந்தசாமி பட இயக்குநர் சுசிகணேசன் இயக்கவுள்ளதாகவும் இதில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.