வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 26 டிசம்பர் 2020 (18:46 IST)

சில தலைவர்களுக்கு எதிராக ...ரஜினி மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழ்வார் - கராத்தே தியாகராஜன்

பிரபல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிரான ரஜினி மாணிக் பாட்ஷாவாக  வருவார் என முன்னாள் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகாராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுனாமி தாக்கி 16 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று சென்னைப் பட்டினபாக்கம் கடற்கரையில் அதன் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கராத்தே தியாகராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நடிகர் ரஜினிகாந்த் குணமடைய பிரார்த்திப்பதாகவும், அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியாதும் கட்சி வேலைகள் அனைத்தும் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,  நல்லவர்களுக்கு மாணிக்கமாகச் செயல்படும் ரஜினிகாந்த் பிரபல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக பாட்ஷாவாகச் செயல்படுவார் எனத் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள அப்பொல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகிறது.