தொடர்புடைய செய்திகள்
- நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை கைவிடுகிறோம்: சிறப்பு விசாரணை குழு அறிவிப்பு..!
- ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.
- தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?
- பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!
- தேனிலவு கொலையின் பின்னணி ஹவாலா மோசடியா? கிழிந்த 10 ரூபாயால் பரபரப்பு..!
கேமிங் ஸ்டுடியோக்களை இழுத்து மூடும் Microsoft! அதிர்ச்சியில் XBox ஊழியர்கள்!
சமீப காலமாக ஐடி நிறுவனங்களில் பணி நீக்கம் அதிகரித்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2 ஆயிரம் ஊழியர்களை நீக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல துறைகளிலும் ஆட்டோமேஷனை விரைவுப்படுத்தி வருகிறது. முக்கியமாக ஐடி துறைகளில் ஏஐயின் வருகைக்கு பிறகு ஆட்குறைப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. பிரபலமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவ்வாறாக ஆட்களை குறைத்து வரும் நிலையில், அடுத்து அதன் கேமிங் பிரிவான எக்ஸ் பாக்ஸில் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரபல கேமிங் நிறுவனமான ஆக்டிவிஷனின் கையகப்படுத்தலை தொடர்ந்து லாபத்தை அதிகரிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது கேமிங் துறையான எக்ஸ் பாக்ஸில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன், சில கேமிங் ஸ்டுடியோக்களையும் இழுத்து மூட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த முடிவால் சுமார் 2 ஆயிரம் பேர் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
Edit by Prasanth.K
