1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Meghalaya Businessman Murder: Two More Arrested in MP, Total Seven in Custody

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

Raja Raghuvanshi and Sonam
மேகாலயா மாநிலம் இந்தூரை சேர்ந்த ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், மத்திய பிரதேசத்தில் மேலும் இருவரை மேகாலயா காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. இதன்மூலம் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனால் 7ஆக உயர்ந்துள்ளது.
 
கொலை செய்யப்பட்ட ரகுவன்ஷியின் மனைவி சோனம், கடந்த மாதம் நடந்த கொலைக்கு பிறகு இந்தூரில் ஒரு பெட்டியை மறைத்து வைத்திருந்ததாகவும், இந்த பெட்டியை மறைத்து வைத்த குற்றத்திற்காக ஒரு தொழிலதிபரை  சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் வைத்து சிலோம் ஜேம்ஸ் என்ற அந்த தொழிலதிபர் சோனம் தங்கியிருந்த கட்டிடத்தின் குத்தகைதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் நேற்று அதிகாலை, அதே கட்டிடத்தில் பாதுகாப்பு ஊழியராக இருந்த பல்லா அஹிர்வார் என்பவரையும் அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவரும் ஷில்லாங்கிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
 
அந்த பெட்டியில் கொலை தொடர்பான முக்கிய ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பெட்டியில் இருந்த பொருட்களை எரித்த இடத்திற்கு தொழிலதிபர் ஜேம்ஸ் காவல்துறையினரை அழைத்து செல்லப்பட்டார்.  
 
இந்த வழக்கில் சோனம், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் மூவர் என ஏற்கனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?