செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2020 (08:37 IST)

வீட்டுக் கழிவறையில் நடந்த கொடூரம் – இப்ப்படியும் ஒரு மனிதனா ?

வீட்டுக் கழிவறையில் நடந்த கொடூரம் – இப்ப்படியும் ஒரு மனிதனா ?
இங்கிலாந்து நாட்டில் தனது வீட்டுக்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் கழிவறையை பயன்படுத்தும் வீடியோ எடுத்த காமுகனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் வசிக்கும் கிரீன் கவுச்சர் என்பவரது வீட்டுக்கு வந்த பெண் ஒருவர் அவரது வீட்டில் உள்ள கழிவறையைப் பயன்படுத்த சென்றுள்ளார்.அப்போது அந்த கழிவறையில் ஒரு இடத்தில் துணிகள் சந்தேகத்திற்கிடமாக திணித்து வைக்கப்பட்டிருந்தன.  அதை நீக்கிப் பார்த்த அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

அந்த துணிகளுக்கு மொபைல் கேமரா ஒன்று படம் பிடித்துக் கொண்டிருந்துள்ளது. இதையடுத்து அவர் போலிஸாருக்குத் தகவல் சொல்ல கிரவுன் கவுச்சரை கைது செய்த போலீஸார் அவரது செல்போனைப் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் பல பெண்கள் மற்றும் சிறுமிகளின் கழிவறையில் உடைமாற்றும் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து கவுச்சரை பாலியல் குற்றம் செய்வோர் பட்டியலில் சேர்த்துள்ளனர்.