1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:59 IST)

போதையில் எஸ்.ஐயை தாக்கிய நபருக்கு மாவுக்கட்டு: கழிவறையில் வழுக்கி விழுந்தாரா?

கடந்த சில மாதங்களாகவே தமிழக காவல் துறையினரிடம் சிக்கும் குற்றவாளிகள் அடுத்த நாள் காலையில் கழிவறையில் வழுக்கி விழுந்து மாவுகட்டு போடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது குறித்து சமூக நல ஆர்வலர்களும் ஏன் நீதிமன்றமும் கூட சில சமயம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒருவருக்கு மாவுக்கட்டு போட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று முன்தினம் ராமநாதபுரம் பகுதியில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி என்பவரை ஒரு சிலர் சுற்றி வளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி படுகாயம் அடைந்து தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை செய்து வருகிறார் 
 
இந்த நிலையில் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியை தாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் கணேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். கணேசன் கைது செய்யப்பட்ட சிலமணி நேரங்களில் அவர் கழிவறையில் விழுந்ததாக கையில் மாவுக்கட்டு போட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கூட்டாளிகளை தற்போது போலீஸ் தேடிக் கொண்டிருக்கின்றனர். போலீசில் பிடிபட்ட கணேசன், தான் மதுபோதையில் போலீசாரை தாக்கி விட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் பதிவு செய்த வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது