செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (19:07 IST)

செயற்கைக் கோள்களால் ஆபத்து வருகிறதா ? விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

உலகில் உள்ள பலநாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள்  தங்களின் இணையதளம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவிவருகின்றனர். இந்நிலையில்,  விஞ்ஞானிகள், இந்த செயற்கைக் கோள்களால் ஆபத்து வரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பிரபல வானியல் விஞ்ஞானி  தாரா பட்டேல் என்பவர் கூறியுள்ளதாவது :
 
அமேசான் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற ஆகிய நிறுவங்களின் செயற்கைக்கோள்கள், பூமியை ஆய்வு செய்யப் பயன்படும் நேடியோ அலைவரிசைகளையும் டெலஸ்கோப பிம்பங்களையும் பாதிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும் பூமியை நோக்கி வரும் எரிக்கல் குறித்த எச்சைக்கை பெறுவதற்கு இந்த செயற்கைக்கோள்கள் தடையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் நிறுவனம் அடுத்த ஆண்டில் பல நூறு செயற்கைக் கோள்களை விண்ணில் அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.