1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. iron war affected share market down

ஒரே மாசத்தில் 282 லட்சம் கோடி இழப்பு!.. ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போரால் பங்கு சந்தை பாதிப்பு!..

share market
ஒரு இடத்தில் இடி இடித்து வேறு ஒரு இடத்தில் மழை பெய்வது போல ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போரால் உலகெங்கும் மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவகியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைக்களுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் எண்ணை நிறுவனங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்த வருவதால் கச்சா எண்ணெய் உற்பத்தி தடைப்பட்டிருக்கிறது.

ஒருபக்கம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹோர்மூஸ் கடல் வழியை ஈரான் அரசு மூடிவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகமும் தடைபட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வணிக சிலிண்டர் கிடைக்கவில்லை .இதன் காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டிருக்கிறது. உணவகங்களில் விலைகளும் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. ஒருபக்கம் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போரால் உலகெங்கும் பங்கு சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த போரால் ஒரு மாதத்தில் 282 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. S&P 500 குறியீட்டு எண் 5.83 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த வாரம் ஏற்பட்ட வீழ்ச்சியால் சந்தை மதிப்பில் 94 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விஜய்க்கு எந்த தகுதியும் இல்ல!.. மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா பேட்டி!..