ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்!.. 400 பேர் பலி!..
கடந்த பல நாட்களாகவே ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 400 பேர் பலியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்..
காபுலில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு சிகிச்சை மருத்துவமனை மீதுதான் பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் எல்லையை மீறி பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக தாலிபன் அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என பாகிஸ்தான் தரப்பு மறுத்துள்ளது. தீவிரவாத செயல்பாடுகள் நடக்கும் இடங்களை மட்டுமே தாக்கி வருவதாகவும் மருத்துவமனைகளை தாக்கவில்லையென பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்திருக்கிறது.